தொலையாத நினைவு!

ஆத்மா
மார்ச் 15, 2020 10:26 முப

தொலையாத நினைவு!

எப்படி முயன்றாலும் 

முடியவில்லை!

முடிவில்லாது நெடிய 

பயணமாய்..........

நினைவை நீங்காது 

நிறைகின்றாய்!

நீயோ நிறைகின்றாய்!

நானோ குறைகின்றேன்!

ஏனோ எனக்கு இந்நிலை!

தானே மயங்குகின்றேன்!

ஏனோ தயங்குகின்றேன் !

ஒரு வார்த்தை பேச 

ஒரு கோடி ஆசை!!!!!!!!!!!!!!!!

ஆசைக்கு ஏது ஓசை ????????

என்னையே தொலைத்தபின் 

எங்கே வைப்பது 

இத்தனை ஆசையை ???????

உன் தொடர்பு எண்ணைத் 

தொலைத்தாலும்..........

தொடரும் நினைவுகளைத் 

தொலைக்க இயலவில்லை!!!!!!!!!!!!

மன்னிக்கவும்!

உனது அனுமதி இன்றி 

உன்னை நினைதற்கு!