மதி மயங்கினேன்...

மகிழ் கோவன்
மார்ச் 14, 2020 03:29 பிப
கார் மேகம் மூடிய நிலவானது காற்றடிக்கும் போது  மேகம் விலகி நிலவின் ஒளியானது கண் பறிக்கும் அதுபோல் கருநிற ஆடையால் மூடி ஒரு கண்ணியின் முகம் கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றில் விலகிய கருநிற ஆடை நிலவின் வெளிச்சத்தை மிஞ்சியது ஒரு ஒளி முழு மதியை மூழ்கடித்த ஒர் முகத்தினைக் கண்டேன் மதியின் அழகினைக் கொண்டு என் மதியை மயங்கிய மங்கை அவள்....