திருமண வாழ்த்து

மல்லி...
பிப்ரவரி 29, 2020 11:59 முப
 
அன்பின் வழியில் ....
 
ஆசை விழியில் பொங்க ....
 
இதயம் இணைந்து இல்லறம் செழிக்க ...
 
ஈருலகிலும் சிறப்புடன் வாழ்க ..!!!!
 
 
உற்றார் உறவினர் மனம் குளிர ...
 
ஊரார் உளமார வாழ்த்த...
 
எட்டுத்திக்கும் புகழ் ஓங்க ....
 
ஏற்றமாய் நலமுடன் வாழ்க ...!!!
 
 
ஐயுறவு நீக்கி மெய்யுறவில் ஐக்கியமாகி ...
 
ஒற்றுமை ஒளிர .....

ஓவியம் போல் அழகாய் ...
 
ஔவியம் போக்கி ....
 
அஃதே காவிய காதலாக காலங்களை வென்று வாழ்க ..!!!