சோகம் என் காதல்

செந்தமிழ்தாசன்
பிப்ரவரி 28, 2020 05:59 பிப
மானே உன்னதானே நினைச்சேனே
நாளும் பொழுதாச்சு இரவாயும்
இன்னும் விடியலையே…
சோகம் என் காதல்
வழிமாறி போகலையே
வாடும் பயிர் வாழ
மழைமேகம் கூடலையே…
 
சொந்தத்தையும் பார்க்கவில்ல
சொத்துசுகம் தேவையில்ல
பக்கதுல நீயும் இல்லாது
சொர்க்த்தில் நரகம் உண்டாச்சு
பாவிமக சொல்லும் சம்மதந்தான்
பார்ப்பதும் எந்தகாலத்தில்தான்…
 
வச்சகண்ணு பார்த்துவந்தேன்
பந்ததையும் உதறிநின்னேன்
வாசமுல்லையும் இப்ப
வாசத்தையும் மறந்திடுச்சா
நேசத்துக்கு ஏங்கும் என்மனத்தான்
ஏத்துக்கிட்டா எல்லாம் சுகதினந்தான்…