விழிப்போம்….

சுவின்
ஜனவரி 25, 2020 01:54 பிப
  விழிப்போம்….

ஒடுங்கிய ஓடங்கள் தொலைந்து போகலாம்
அடக்கிய ஆழி அலைகள் அலுத்து போகலாம்
பாடிய பறவைகள் பறந்து போகலாம்
துள்ளித் திரிந்த மான்கள் தூரமாக போகலாம்
வேரிழந்த உயிர்கள் உயிருக்கு ஊசலாடலாம்
கிளை யிழந்த உயிர்கள் கண்ணீh வடிக்கலாம்
பாசங்காட்டிய பாமரர்கள் பலம் இழக்கலாம்
உரிமையற்ற உணர்வுகள் ஊமையாகலாம்
ஆனால்
காலம் கனிய கயவர்கள் தூக்கியெரியப்படுவர்
மானுடம் ஞானம் காண மடமை களையப்படும்
இளமை நெஞ்சை நிமிர்க்க இன்னல்கள் அகற்றப்படும்
காணுவோம் ஞானத்தை நிமிர்த்துவோம் நெஞ்சை
அகற்றுவோம் நச்சுக் கிருமிகளை.
 
 
 
 
 
ம. மரிய சுவின்