தாய்மையின் பரிசு 

Paappu
டிசம்பர் 18, 2019 06:57 பிப
       

ஐயிரண்டு திங்களும் ....!

கண்ணும் கருத்துமாய் ....!

கருவாய் உனை சுமந்து .....!

கற்பனையில் முகம்தீட்டி....!

உணர்வோடு உரையாடி ...!

திக் திக் நிமிடங்களில் ....!

பக் பக் வென படபடக்க ...! 

ஆ...ஆ... என்ற அலறலுடன் ....!

வீர் வீர் என்ற அழுகுரலுடன் ...!

பிஞ்சுவிரல் பாதம்பதிக்க ...!

பூமியில் பிரவேசித்தாய் ....!

கொஞ்சும் தமிழால் ...!

பூவிதழில் கதை கதைக்க...!

குறுநகையால் களவாட ....!

பிறர்மனம் கவரும் கள்வனாய் ....!

எண்ணிய வண்ணமாய் ....!

தாய்மைக்கு கிடைத்த

 பரிசடா  -- நீ


என் தங்க மகனே .....!