மௌனம் சம்மதமா?

Prabaharan Ganesan
November 06, 2019 06:51 பிப
சில நேரங்களில் மௌனம் கூட மொழி பெயர்க்க படுகிறது....
எல்லா மொழிகளிலும் சம்மதமாக மட்டும்....
விளக்கம் எழுத வேண்டும் புது வழியில்....
எல்லோர்க்கும் தேவையான பொது நடையில்....
சூழ்நிலையில் சுருதி இல்லா மௌன ராகமாய்....
சுமைகளில் விழி நீர் தாண்டாத புன்னகையாய்....
சங்கடத்தில் சாந்தம் காட்டும் புன்முறுவலாய்....
தவிப்புகளில் தடை உடைக்கும் தனிமையாய்....
விதியை மீறும் தருணங்களில் தண்டனை ஏற்கும் கைதியாய்....
யாரிடமும் அறிவிக்காத அரைக்கூவலோடு எல்லாமுமாய்....
மௌனத்தின் வலியை விசும்பலோடு ஒரு துளி கண்ணீருடன் விளக்கலாம்.... மௌனம் சம்மதமோ சமாதானமோ மட்டும் அல்ல....
சொல்ல முடியாத பல எண்ண சுவடுகளின் தொகுப்பு....
சில சித்திரங்களின் மனக்கொதிப்பு....
மௌனம் ஒரு மொழி அல்ல.... ஒரு வகை வலியும் கூட....