மௌனம்

Prabaharan Ganesan
November 06, 2019 06:47 பிப
என் மௌனத்தை திறக்கும் சாவி உன்னிடம்....
என் ஆயுள் தீரும் வரை மாறாது உன் இடம்....
என் அன்பை மெய்ப்பிக்க ஒரு ஆயுள் போதுமா....
அதனால் தான் எனக்கு பிரிவென்னும் சாபமா....
இன்னும் ஒரு ஜென்மம் கடன் கேட்டாலும் அதோடு முடியுமா....
விலகி விலகி நீ போக,  இளகி இளகி என் மனம் உன்னை தேட....
நிராகரிக்க படும் என் அன்பும்,
புறக்கணிக்கப்படும் என் உறவும்
உருக்குலைந்த நீ இல்லா என் நாட்களும்
உருவம் பெறும் நாள் தொலைவில் இல்லை....
என்ன தவம் செய்தேனோ நீ கொடுத்த நாட்களுக்கு....
என்ன வரம் நான் கேட்க உன்னில் எனை சேர்ப்பதற்கு....
அது போதும் கண்ணே நானின்னும் கொஞ்சம் வாழ்வதற்கு....