இலக்கண பிழை

Prabaharan Ganesan
November 06, 2019 06:44 பிப
இலக்கண பிழை போல...
இலக்கிய நயம் போல...
உனக்காக எழுதிய வரிகளுக்கு கருத்துகள் பல வர...
நீ மட்டும் மௌன விரதம் கடைபிடிக்க ...
இலக்கண பிழை தான்...
ஐப்பசியில் நீளும் புரட்டாசி...
விரதம் கலைக்காத சுகவாசி...
விழிநீர் துடைத்திடும் விரல் வேண்டாம்...
சரி என்று அனைத்திடும ஸ்பரிசம் வேண்டாம்...
பார்த்து கொள்கிறேன் என்ற‌ பதில் வேண்டாம்...
நான் இருக்கிறேன் என்ற நாத ஒலி வேண்டாம்...
பரவாயில்லை என்ற புன்முறுவல் வேண்டாம்...
பாவம் என்ற‌ பச்சாதாபம் வேண்டாம்...
பழகிய நன்றிக்கடன் வேண்டாம்...
புரிந்து கொண்டேன் என்று ஒரு  பார்வையும்...
ழைதெரிந்து கொண்டேன் என்ற தோரணையும் போதும்....