மனைவி

R balaji
November 01, 2019 09:49 முப
என் கற்பனையில் வந்த எதிர்பார்ப்பு 
 
 
அழகான மனைவி 
 
நான் சொல்லும் அழகு உடல்லல்ல உள்ளம் 
 
இனிமையான வேளையில் இருமணம் இனைய வேண்டும் 
 
வாழ்க்கை எனும் வரலாறு தொடங்க வேண்டும் 
 
அதற்கு வலு சேர்க்கும் விதமாக பிள்ளைகள் என்ற வரப்பிரசாதம் வரவேண்டும் 
 
என்அன்னை போன்று பெண்பிள்ளையும் 
அவள் தந்தை போன்று ஆண்பிள்ளையும் அமைய வேண்டும் 
 
உறவுகள் ஒன்று கூடி உறவாட வேண்டும் 
 
இப்படியான வேளையில்
வரப்பிரசாதங்களை பெற்றதற்க்கு பெருமையடைய வேண்டும் 
 
காலங்கள் சில சென்ற பின் நாங்கள் சம்மந்தி என்ற சிம்மாசனத்தில் அமரவேண்டும் 
 
பேரபிள்ளையின் அன்பு உதையில் உறையவேண்டும் 
 
அந்த மழலையின் ஓசை கேட்டு களிப்புற வேண்டும் 
 
இறுதியில் அனைத்தையும் பெற்ற ஆனந்தத்தில் அவள்மடியில் நானும் என்மடியில் அவளும் விடைபெற வேண்டும்.