களப்பிரர்கள் மூவேந்தர்களை வீழ்த்தினார்கள் என்பது உண்மையா? | நமது களம்

நமது களம்
October 22, 2019 07:15 பிப
வட திசையிலிருந்து ஒரு பெரும்கூட்டம் கார்மேகம் சூழ்வது போல் களப்பிரர்கள் தங்கள் படைகளை நகர்த்தி வந்து தென்னாட்டின் (இன்றைய தமிழக - கேரள பகுதிகள்) மீது படையெடுத்தார்கள்!... இந்தப் பெரும் நிலப்பரப்பைத் தன் ஆளுகைக்குக் கீழ்க் கொண்டு வந்தார்கள்!... சுமார் 300 ஆண்டுகள் இவர்கள் ஆட்சியின் கீழ் தென்னாடு இருந்தது!... இது அனைவரும் அறிந்ததே! ஆனால்...

ஒவ்வொரு முறையும் தமிழக வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும்போது மனதை நெருடும் ஒரு கேள்வி...

மூவேந்தர்களை வீழ்த்தினார்களா களப்பிரர்கள்?...

இது ஒருவிதமான உறுத்தலை அளிக்கிறது.

என்ன, தமிழ்த்தாய் மைந்தர்களான மூவேந்தர்கள் வீழ்த்தப்பட்டார்களா!!...
உண்மையில் அது நடந்ததா?!...
அயலார் படை நம் தமிழ் நிலத்தின் மாபெரும் பேரரசுகளை வெற்றி கொண்டதா?!!...
அது எப்படி சாத்தியம்?...
இந்தக் கேள்விகளிலிருந்து தொடங்கியதே இந்தத் தேடல்.

கி.பி 253 - 290 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் களப்பிரர்கள் தமிழ்நாடு மீது படையெடுத்ததாக அறிஞர்களின் கூற்று. அதே காலக்கட்டத்தில் - அதாவது கிபி-3ஆம் நூற்றாண்டில் - தமிழகத்தின் அரசியல் நிலைமை என்ன தெரியுமா?

வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!...