அவள்

கவி அறியான்
ஜூலை 13, 2019 12:19 முப
தூங்கிவிட்டாள் தட்டி எழுப்பவும், 
துயரத்தை துடைக்கவும், 
தூண்போல் நின்று- துணையாய் காக்கவும்.
ஆள் இல்லையே 
 
சிரித்து பேசவும், 
சிந்தனை கவரவும், 
தனிமை தகர்க்கவும், 
கவலைகள் கொட்டவும். 
ஆள் இல்லையே 
 
கைகோர்த்து சுற்றிவர, 
கனவுகளுக்கு ஊக்கமளிக்கிர 
ஆள் இல்லையே 
 
விருந்தோம்பல் இல்லை-விசாரிக்கவே ஆள் இல்லை. 
 
தேவைக்கு நாடி, நன்றிமறந்து நடைக்கட்டும் நல்லோர் தேவை இல்லை........ தனித்து ஓடு,
தனித்துவதோடு பயணி, 
தன்னம்பிக்கையோடு எதிர்நீச்சலிடு... 
வாழ்க்கை கடலை கடந்து வெல்வாய்