யுகம்

கவி அறியான்
ஜூலை 13, 2019 12:18 முப
அழகு என்பது 
அறம் சார்ந்தது என்றில்லாமல் 
நிறம் சார்ந்தது என்றானது… 
 
வாய்மை என்பது 
வாழும் வாழ்க்கை என்றில்லாமல் 
வெற்று வார்த்தை என்றானது… 
 
உதவி என்பது 
பிறருக்கான நன்மை என்றில்லாமல் 
நமக்கான விளம்பரம் என்றானது… 
 
எளிமை என்பது 
எடுத்துக்காட்டு என்றில்லாமல் 
ஏய்க்கப்பட என்றானது… 
 
மரியாதை என்பது 
உன்னத உள்ளத்திற்கு என்றில்லாமல் 
உடுத்தும் உடைக்கு என்றானது… 
 
ஏமாற்றுதல் என்பது 
சமூகத்தின் அவலம் என்றில்லாமல் 
சாமர்த்தியத்தின் அளவீடு என்றானது… 
 
சம்பாத்தியம் என்பது 
சராசரி விடயம் என்றில்லாமல் 
சந்தோஷத்தின் அவசியம் என்றானது… 
 
அவ்விதம் 
அடுக்கிக் கொண்டே போகின்றது, 
அன்றாட வாழ்வில் 
அழுக்கான அர்த்தங்கள்!!!