தனிமை

கவி அறியான்
ஜூலை 13, 2019 12:17 முப
ஒரு 
தனிமை சொன்னது. 
கண்களில் கண்ணீரை சுமந்துக்கொண்டு....... 
 
நேரங்கள் கடக்க 
பாரம் குறைய வெளியேறிய 
வேதனைகளாக கண்ணீர்....... 
 
வெறித்துப்பார்த்த கண்கள் 
சிவந்துவிட்ட இதயம் 
அழுதுவிட்டது...... 
 
பாரம் குறைந்துவிட்டதா! 
இதயம் அழுதுவிட்டதா! 
நினைவுகள் அழிந்துவிட்டதா..... 
 
அணைத்துக்கொண்ட தனிமை 
அன்றுமட்டும் சொன்னது ஆறுதல் 
அழுகையோடு இருந்த இதயத்திற்கு...... 
 
எனக்கு நானே 
ஆறுதல் சொன்னேன் 
அழுது முடித்தேன்....... 
 
மீண்டும் வருவேன் 
வேதனையோடு சொன்னேன் 
பிரிய மனமில்லாமல் 
தனிமையே சென்று வருகிறேன்.......