விசிறிப்பெண்ணே

கவி அறியான்
ஜூலை 13, 2019 12:16 முப
விசிறிப்பெண்ணவளே விந்தைக்கண்கொண்டு என்னைக் கொள்பவளே..... 
உன் கண்கள் என்னைச்சிறைப்பிடிக்கும் என்றோ கண்ணாடியுடன் என்னைக்கடந்து செல்கிறாய்... 
உன் நீளக்கூந்தளில் இடம் தாராயோ நான் பூவினமாய் மாறி அழகு சேர்க்க....
நான் கற்ற தமிழும் போதவில்லையடி
உன் அழகை எழுத
அகராதியை குறைச்சொல்கிறேன் உன்னாளே.....
சூரியனின் வெப்பத்தழலும் என்னில் குளிர்ச்சியை கக்குதே குளிர்நிலவே நான் உன்னருகில் வர.... 
உன்னை எழுத வரிகளும் பஞ்சமாகியதே
உன் இதழைத்தா வரிகள் தேடிக்கொள்கிறேன்...... 
உன் இதழ் நிறங்களை சேகரிக்க அணிவகுக்கும் ஆடைத்தொழிலாளிகளில் நானும் ஒருவன்.... 
உன் கணிதக்கேள்விகளுக்கு இலகுவில் பதிலளிக்கும் என்னாள் 
உன் கண் பேசும் வார்த்தைகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லையே...
காதல்வேண்டாமடி கன்னிப்பெண்ணே உன்னைக்காண்கையில் கிடைக்கும் களிப்புப்போதும்.... 
ஒருதலைக்காதலன்..