ஆண் பெண் நட்பு

கவி அறியான்
ஜூலை 13, 2019 12:10 முப
ஆண்-பெண் நட்பு தயக்கத்தோடு ஆரம்பிக்கும் முதல் உரையாடல். பயத்தோடு பகிர்ந்து கொள்ளப்படும் அலைபேசி எண்கள். அவள் தவறாக எண்ணிவிடுவாளோ?-என்று யோசித்து,யோசித்து பேசும் தருணங்கள். காதல்,கீதல் என உளறுவானோ?-என்று குழப்பத்தோடு பேசும் ஆரம்பக்காலங்கள். புரிதல் தொடங்கும் நேரத்தில் தானாக மலர ஆரம்பிக்கும் நட்பு மலர். புரிந்து கொண்ட பின், ஆண்-பெண் வித்தியாசத்தை காணாமல் ஆக்கும் நட்பின் ஆழம். தோல்விகண்டு துவலுகையில் புதுத்தெம்பூட்டி,அடுத்த முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள் அவனை அவன் தோழி. ஆடவர் நால்வர் முன் தைரியத்தோடும்,பெண்மை மாறாமலும், வாழ வழிகாட்டுவான் அவளுக்கு அவள் தோழன். முடிவில்லா முடிவில்-நட்பு வளர்ந்து நிற்கும்? புரிந்து இருக்கமாட்டார்கள் என்னை, என் தோழியை/நண்பனை விட வேறு யாரும் நன்றாக என்னும் ரீதியில்...! வளரட்டும் இதுபோல் ஆரோக்கியமாக ஆண்-பெண் நட்பு. இறுதிவரை நட்பு மாறாமல் வாழ்ந்த,வாழும் அனைத்து ஆண்-பெண் நட்பு நெஞ்சகளுக்கும் இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்.