தமிழ்நாட்டுப் பெற்றோர்களுக்கு நடிகர் சூர்யாவின் அவசரக் கடிதம்!

நமது களம்
ஜூன் 29, 2019 07:38 பிப
மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு கல்வியாளர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் கடும் கண்டனத்தை ஈட்டி வருகிறது. இந்தி - சமற்கிருதத் திணிப்பு, நாட்டின் பன்முகத்தன்மையை அழித்தல், ஏழைகளுக்குக் கல்வியை எட்டாக் கனியாக்குதல் என இந்தக் கல்விக் கொள்கையில் அடி முதல் நுனி வரை காணப்படும் அத்தனையும் நாட்டின் மொத்தக் கல்வித்துறையையும் சீரழித்து விடும் என எச்சரிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்நிலையில் ‘அகரம்’ அறக்கட்டளை மூலம் ஆதரவற்றோரின் வாழ்வில் தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கல்வி விளக்கேற்றி வரும் நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாகப் பெற்றோர்களிடம் அவசரமான ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். துவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அந்தக் கடிதம் இங்கே உங்கள் இன்றியமையாப் பார்வைக்கு.

முழுமையாகப் படிக்க 👉🏽 namathukalam.com/2019/06/Letter-from-Suriya-to-TN-Parents.html