பொது அறிவித்தல்

கோமகன்
ஜூன் 26, 2019 02:35 பிப

வணக்கம் படைப்பாளிகளே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே

இந்த ஆண்டின் கோடைகாலப் பகுதியில் - ஆவணி மாதம் நடுவை 'தமிழக சிறப்பிதழாக' வெளிக்கொணர நாம் தீர்மானித்திருக்கின்றோம். இதற்கான ஆக்கங்களை தமிழகப் படைப்பாளிகளிடம் இருந்து எதிர் நோக்குகின்றோம். ஆக்கங்கள் பின்வரும் தலைப்புகளில் நடுவுக்காக, 'யூனிகோர்ட்' இல் எழுதப்பட்டிருக்க வேண்டும். வேறு பத்திரிகைகளில் வெளியாகிய ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

01 சிறுகதை

02 கவிதை

03 மொழிபெயர்ப்புக்கவிதை

04 நேர்காணல்

04 கட்டுரைகள் :

தலித் இலக்கியம்

மூன்றாம் பால் சமூகத்தவர் நிலைகள் மற்றும் சமபால் உறவு தொடர்பான உரையாடல்கள்

அபுனைவு புனைவு தொடர்பான ஆக்கங்கள்

விளிம்பு நிலை மக்கள் தொடர்பான ஆக்கங்கள்

சமகால இலக்கிய செல்நெறிகளின் போக்கு

காப்ரேட் கம்பெனிகளின் ஆக்கிரமிப்பு மற்றும் தொலையும் கிராமிய வாழ்வு முறைகள்

சினிமாத்துறை தொடர்பான ஆக்கங்கள்

நாட்டார் கலை மற்றும் நவீன நாடக செல்நெறிகள்

தமிழக சிறப்பிதழ் தொடர்பான உங்கள் ஆலோசனைகளை உள்வாங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம். ஆக்கங்கள் பின்வரும் மின்னஞ்சலுக்கு : editornadu@gmail.com ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்படல் வேண்டும் நன்றி .

நடு குழுமம்