தேடல்கள்

Babeetha
May 03, 2019 11:18 முப
எல்லா தேடலும்
ஏங்குவது பதிலுக்காக!
அவன் ஒரு மண் விரும்பி,
தண்ணீர் இல்லாக் காலத்தில்
கண்ணீரை ஊற்றி
மக்களின் பசி தீர்த்த - அவன்
மலர்ந்த மலரை சந்திக்க
மண்டையோடு கொண்டு
மண்டியிட்டு நின்றான்!
ஈரமில்லா மலரானது...
சுட்டு  தீர்க்கும் வெயிலில்
ஒட்டு துணி இன்றி
தெருவோடு புரண்டான்!
மலர் மலர்ந்து என்ன பயன்?
கடல் அன்னை - அவள்
கண்ணீரால் தண்ணீர் கொடுத்தாள்!
மலர் நெகிழி ஆக!
எல்லா தேடலும் காலத்தின் வசம்!!
மண்டையோட்டுடன் சென்ற 
மண் விரும்பியை நாடி - ஓடி
மலராத மலருக்கு ஒட்டு கேட்டு!!
                             -. மொழிலினி