மழை வெள்ளம்!! !

மல்லி...
ஏப்ரல் 11, 2019 04:50 பிப
கள்ளமில்லா அன்பின்  
வெள்ளம் தாங்கும்
 உள்ளம் உண்டு  இங்கு....  

பள்ளமில்லா இடமின்றி
பாய்ந்தோடும் வெள்ளமே ..!

 தூங்கும் இடமின்றி
நாங்கள் செல்வது எங்கு . . ?

  மழையே பார் . . !

 எழில்மிகும் எம் ஊர் . .
எழமுடியாமல் மூழ்குவதை ...  

குயில் பாடும் குரல்கள் . . கூக்குரலிட்டு கதறுவதை.
 தண்ணீரில் பயிர்கள் . . .
கண்ணீரில் உயிர்கள் . . .  
பயத்தோடு பரிதவிப்பதை . . .  

மாடி மேல மாடி வச்சு
கட்டினோம் பல கட்டிடம்..  
இன்று ஒதுங்க இல்லை
ஓர் இடம்.  .

நீ உன்னால் முடிந்தவரை
தண்ணீரை கொட்டி விட்டாய் ..!

 எங்களால் முடிந்தவரை
கண்ணீரை கொட்டி விட்டோம் ...!

 இனிசென்னீர் மட்டுமே ...!

  பன்னீர் தெளித்து வழி அனுப்புகிறோம் . .!  

இன்று போ . ...

 என்றாவது வா . . .

 அன்றும் அளவோடு வா ....

 அன்போடு வா . ..  

பேய் மழையே பெய்யாதே . .  
தாய் மனதும் வைய்யாதோ . .
அடை மழையே பெய்யாதே . .  
படை போல் வந்து பாயாதே . .

  மலர்கள் மணம் வீசும் . . .
 எம் பெண்களின்
நாணம் கூசும்...
பயிர்கள் பசுமை பேசும்...
 
பூத்து குலுங்கிய பூக்கொடி அது .
           இப்போது
செத்து கிடப்பது கொடியது . .

  விண்ணை விட்டு . . .

 மண்ணைத் தொட்டு . .
 சென்றது ...

என் கண்ணை  
கலங்கவைக்கவா . . . ?  

போதும் ..!
போதும்..!  

நிறுத்திக் கொள் . . !  
இதற்கு மேலும்  
 வறுத்திக் கொல்லாதே . . ! ! !