உன் மடியில்..

மல்லி...
ஏப்ரல் 08, 2019 02:12 பிப
உன்னை கட்டி அணைக்கும் போது உலகில் உள்ள மொத்த காதலும் என்னை தழுவிக் கொள்கிறது...

உன் விரல் பிடித்து நடக்கும் போது என் தலைக்கணம் எல்லாம் தளர்ந்து போகிறது..

நீயே தவறு செய்வாய்...
நீயே கோபித்தும் கொள்வாய்...
உன் பாதம் எடுத்து முத்தமிட்டு மன்னிப்பு கேட்கும் போது உதட்டோரம் சுழித்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொள்ளும் உன் அழகில் என் அதிகாரங்கள் எல்லாம் அடங்கி போகிறது...

உன் சிறு பங்கு சோற்றில் சிந்தி சிதறி எனக்கு ஒரு வாய் ஊட்டும் போது அந்த நிலா சோறும் தோற்று போகிறது...

நித்தமும் சலிக்காது உன்னை முத்தமிட வலிக்காது என் இதழ்கள்...
ஏனம்மா என் கன்னத்தை எச்சில் செய்கிறாய் ..?
என்று கேட்கும் உன் மழலை பேச்சில் நான் மழலையாகிறேன் உன் மடியில்...