தேர்தல் நேரம்!!!

மல்லி...
ஏப்ரல் 04, 2019 02:09 பிப
வாராவாரம் ஆரவாரம்....!!
ஆங்காங்கே அலறும் பிரச்சாரம்...!!

கண்கொண்டு பார்க்க கூட நேரமில்லாதவர்
நேரில் வந்து காலில் விழுவார்..!
வணங்கி விட்டுச் செல்லவா..?
வாரி விட்டுச் செல்லவா..?
நான் என்ன சொல்ல..?
இது தேர்தல் நேரம்!

அனல் பறக்கும் பேச்சு ...
போனமுறை அள்ளிவிட்டதெல்லாம் 
என்ன ஆச்சு..?
கானல் நீராய் காணாமல் போச்சு..

"திருடர்கள் ஜாக்கிரதை"
திருடப்படுவது பணம் அல்ல
  மனம்..
 இது தேர்தல் நேரம்!

மாறி மாறி பழி போட்டு ..
வெளிவரும் பல குட்டு..
கட்டுக் கட்டாய் காந்தி நேட்டு..
வாங்கப்படும் கள்ள ஓட்டு..
பொல்லா ஆட்சியில்
இருந்து நாட்டை மீட்டு..
நீ யாரென்று காட்டு..
இது தேர்தல் நேரம்!

இந்த முறை மயங்க போவதில்லை..
தங்கள் விந்தைகளில்..!
எந்த வாக்கும் விற்கப் படுவதில்லை..
எங்கள் சந்தைகளில்..!
தந்த வாக்கும் நிற்கப் போவதில்லை..
ஜெயித்த பின்
உங்கள் சிந்தைகளில்..!
இது தேர்தல் நேரம்..!
இது நம் நேரம்..!
 என் வாக்கு என் உரிமை!!