எங்கே சென்றாய் நட்பே..?

மல்லி...
ஏப்ரல் 03, 2019 11:34 பிப
வாட்ஸ்அப்பில் வருவதில்லை....
முகநூலில் முகமும் இல்லை...
கால் செய்ய காலமும் இல்லை...
தொலைதூரம் சென்றாலும் தொலைந்து விடவில்லை...
தொடர்பில்லையென்றாலும் தொலைத்து விடவுமில்லை....
என் மனதில் உன் நினைவுகள் கலைந்து போவதும் இல்லை...
உன்னை நினைத்து நினைத்து
நான் களைத்து போவதும் இல்லை...
உன்னை நினைவூட்டும் பல பொருட்கள் என்னிடம் உண்டு..
உன்னைத் தவிர.
எங்கே சென்றாய் நட்பே...
நீ உயிரோடு இருப்பதை உணர்கிறேன்...
ஏனென்றால் நான் இன்னும் சாகவில்லையே..!!!