பெண் சிசு..

மல்லி...
ஏப்ரல் 02, 2019 09:19 முப
"பெண் சிசுவே....
 நீயாகவே கரைந்து விடு கருவில்....
காரணம் நீ இருப்பதோ பெண் உருவில்... 
மீறி பிறந்தால் கசக்கப் படுவாய் விரைவில்....
சிதைத்து தூக்கி எறியப்படுவாய் தெருவில்....
பெண்பிள்ளைகள் பூவை போல...
மலரும் முன்னே பறிக்கப்பட்ட காலம் மாறி இப்போதெல்லாம்
 வளரும் முன்னே ஒடிக்கப்படுவது நியாயமா..?.
பெண் சிசுவே.....
நீயாகவே கரைந்து விடு ....
இது நாடல்ல...
சில காம பேய்கள் சுத்தும் காடு...
பாலியல் தொல்லை இல்லாத இடமே இங்கில்லை..
சமீபத்திய காயங்களின் தடமே மறையவில்லை...
அதற்குள் அடுத்த அரங்கேற்றமா..?
போகட்டும் என கண்ணை துடைத்துக் கொண்டு வர இது சினிமா படம் இல்லை...
பச்சிளம் பிள்ளைகளிடம் 
இச்சை தீர்த்துக் கொள்ள துடிக்கும் எச்ச வெறிநாய்களா...
உங்கள் ஆசைக்கு நிறைய வழிகள் இருக்கு...
பிஞ்சு குழந்தை எதுக்கு...?
என்னடா தெரியும் அதுக்கு...?
உலகை ரசிக்கும் முன்பே
உருக்குலைத்து விடுகிறீர்களே...
 
 வேஷம் போடும் சில ஆண்கள்...
 மோசமாக பார்க்கிறது பல கண்கள்...
என்ன தான் செய்யும் குழந்தைகள்..?
 காவலனே 
காலனாக மாறினால்...
உறவே தவறாக போனால்...
சுற்றமே குற்றம் செய்தால்...
மீண்டும் சொல்கிறேன் கனத்த மனதோடு நீயாகவே கரைந்து விடு...