எனக்குள் எத்தனை எத்தனை வேறுப்பாடு

GSR
மார்ச் 23, 2019 02:55 முப
உறங்கும் நேரத்தில் 
கண்கள் ஒத்துழைப்புக் 
கொடுக்கவில்லை! 

படிக்கும் நேரத்தில் 
கவனம் ஒத்துழைப்புக் 
கொடுக்கவில்லை 

உண்ணும் நேரத்தில்
வாய் ஒத்துழைப்புக் 
கொடுக்கவில்லை 

இன்றைய சமூகப் பார்வைக்குள் எதுவுமே நாயமில்லை,
குறைகள் காண்பதில் இங்கு சலித்தவர் யாருமில்லை

பொய்யான பிம்பத்தோடு
சுழல்வதில் பெருமையில்லை
எனெக்கன்னென்று வாழ்வதால்தான்
உயிருக்குள் ஊற்று இல்லை

ஆளுக்கு தகுந்தார் போல் 
முகமூடியணிய விருப்பமில்லை
அதனால் தானோ என் நிலை
இன்னும் முன்னேறவில்லை

அசல் எது நகல் எது என்று
தெளிவாக விளங்கவில்லை 
நிஜமாக என்னை 
வதைக்க துளியும் விருப்பமில்லை 

நானாக செயல்படும் பொழுதும்
சமூகத்தை சார்ந்து வாழ்வதால்
என்னை மீறிய ஒரு நிலைப்பாடு, 
அதை உணர்ந்த பிறகுதான் 
எனக்குள் எத்தனை எத்தனை வேறுப்பாடு 
இங்கு முளைக்கு ஒவ்வொரு உதவிகளும், வியாபரத்தின் ஆணி வேரு! ஐயோ! 
ஞா.கா.செளந்தர் ராஜன்