முதுமையில் காதல் !

சோலை..! CSR..!
பிப்ரவரி 03, 2019 04:17 பிப
ஆண்:
பனியார குழி கன்னகாரி
எலி பொந்து கண்ணழகி
பனி போர்வை முடியழகி
அலை யோடியதோ லழகி
பூகம்ப காலோடு பேரழகியே
தோற்றேனடி...

பெண்:
வரி குதிரை நெஞ்சழகா
காந்தார குரலழகா
ஏர் பூட்டலில் அர்ஜினா
அறுபதிலும் ஆணழகா
யானை நடை பேரழகை
வென்றேனே...

ஆண்:
உன் மடியில் நாதூங்க‌
தள்ளாடும் வயதிலும்,
நம் காதல் சிதை யேறும்
நேரத்திலும் உன்னோடு..!