தேவதை !

சோலை..! CSR..!
பிப்ரவரி 03, 2019 03:40 பிப
தேவதையை கண்டேன்
சாலையோரத்தில்,
சிலையென நின்றேன்
அக்கனமே
சுற்றிப்பார்த்தேன் உலகமும்
திகைத்தது.
அடடா! பேரழகுக்கு
சொந்தக்காரி
ரம்மை, ஊர்வசி, மேலகாவை
பார்த்ததில்லை _ ஆனால்
பார்த்தவள் தேவதை தான்...
என்னுல் தடுமாற்றம்,
குப்பையான என்னையும்
பார்பாளா என,
பேருந்துக்காக திரும்பிய அவளின்
பார்வை சாரலோ
மென்மையாக என்னை கடந்தது...
மின்னலின் ஒளியாய்...
அவள் பார்வையில் கண்மூடி
திறந்தேன், என்னுள்
ராவன் ராகம் மட்டுமே
அன்றில் இருந்து..!