இறப்பு

கார்த்திகா    பாண்டியன்
பிப்ரவரி 02, 2019 12:07 பிப
நீ எனக்குச் சொந்தமில்லை என்று தெரிந்தும் கனவில் கழிக்கிறேன் உன்னுடன் வாழ நினைத்த என் காதலை,
பித்துப்பிடித்த இதயத்தில் இரத்தம் வழிகிறது நீ விட்டுச் சென்ற காதல் வடுக்களால்,
நம்ப மறுக்கும் இதயத்திடம் யாசகம் கேட்கிறேன்,
என்ன செய்வது???
குப்பையாக கிழித்தெறியப்பட்ட என் காதல் உன்னைப் பொறுத்த வகையில் இறந்ததாகவே இருக்கட்டும்,
என் காதல் இம்சைகளில் இருந்து எப்போதோ உனை விடுதலை செய்து விட்டேன்,
புலம்பித்திரியும் என் மனதிற்க்கு முற்றுப்புள்ளி வைக்க ஏங்குகிறேன்,
உன்னை குறை சொல்வது என் நோக்கமல்ல,
நான் எமாற்றப்பட்டேனா? என்பதை தாண்டி, எதிர்பார்ப்புகளால் தண்டிக்கப்பட்டேன் என்பதே நிதர்சனம்,
தண்டனைக் கால அவகாசம் என் வாழ்நாள் முழுவதையும் ஆக்கிறமிக்கிறது உன் நினைவுகளிலிருந்து எனை விடுவிக்க‌.