குழந்தையே !

சோலை..! CSR..!
ஜனவரி 27, 2019 06:08 பிப
சிப்பியில் விழுந்த துளியிங்கு
முத்தாக பிறந்தது,
தாமரை மலரிங்கு மாலையில்
..... மலருது
வண்ணத்து பூச்சி போல்
தரையிலே பறக்குது
தங்க முகமிங்கு சந்தனமாக‌
..... வெளுக்குது
காணல் நீராய் அழுகையில்
கண்ணீர் தெரியுது
பால்வாடை உன்னில் சவ்வாதாய்
..... மணக்குது
சேட்டைகள் செய்வதில் செவாளியன்
..... நீயே..!