மின்னல்!

சோலை..! CSR..!
ஜனவரி 17, 2019 10:25 பிப
கருப்பு காகிதத்தில்
வண்ண வண்ண கோடுகள்,

சின்ன சின்ன வளைவுகளில்
சித்தரிக்கும் எண்ணங்கள்,

வெள்ளி முத்துக்களை
தேடும் மேகமுகடுகள்_நீயே

முகில்களுக்கு பிற‌ந்த‌
செல்ல குழந்தைகள்,

என்னயிது கண்ணாமூச்சி
ஆட்டமா, எட்டிஎட்டி பார்கிறாய்...


அடடா, தோற்று நீ
விம்மிவிம்மி அழுகிறாய்

விசும்பெல்லாம் வெளுக்க...


கண்ணை ப‌ரிக்கும் உன்
அழகெல்லாம் கண்ணிமைக்கும்‍_நேரத்திலே..!