திருமண வரம் தா!

சோலை..! CSR..!
ஜனவரி 17, 2019 08:47 பிப
வார்தைகள் கோடி
இன்பங்கள் கூடி
தாரம் இவளென்று
வரமொன்று தா...

தங்கங்கள் உறுகி
தாழியாக செதுக்கி
மேடையில் பரிசளிக்க‌
வரமொன்று தா...

சூளவரம் சூல‌
புஸ்பங்க‌ள் தூவ
மங்களம் பாட‌
வரமொன்று தா...

அம்மியோடு பாதம் வைத்து
அருந்ததி முகங்கள் கண்டு
பிஞ்சு விரலில் மிஞ்சியிட‌
வரமொன்று தா...

அம்மையப்பன் பாதம் தொட‌
அறுசுவை உணவுன்ன‌
பாலும் பழமும் சேர்ந்திட‌
வரமொன்று தா...