> > > > காலமெல்லாம் காத்திருப்பேன்……….

ஜோஸ்
ஜனவரி 11, 2019 04:57 பிப

> > > > காலமெல்லாம் காத்திருப்பேன்……….

வாலிப வயதின் மறுபக்கம்
அறியத் தந்தவன்!
இன்பத்தின் எல்லை வரை
அழைத்து சென்றவன்!

தனிமையிலும் என்னுள் கலந்து
இனிமையாக்கியவன்!
இமை மூடும்பொழுதும் தனது
குறும்பால் சிரிக்க செய்தவன்!

கண்ணாடியில் முன் நின்றாலும்
பிம்பமாய் தெரிபவன்!
நிழலோடும் பேசும் வித்தை
கற்றுத் தந்தவன்!

அவன் பெயரை எழுதியே தமிழையும்
ரசிக்க செய்தவன்!
மிஞ்சினால் கெஞ்சியே வெயில்கண்ட
பனியாய் உருக வைப்பவன்!

மடிமீது படுத்து சேயாய் 
சேட்டைகள் புரிபவன்!

வருகின்றேன் என்று சொல்லி சென்றவன்
மாதங்கள் வருடங்களாகியும்
இன்னும் வரவில்லையே!

காற்றில் கலந்திட்ட
என் சுவாசமே என்னவனிடம்
தூது போய் சொல்லிடு -
அவனின் வருகைக்காக
பெண்மை இங்கு தனிமையில்
தனிமரமாய் தவம் புரிகின்றாளென்று!

மன்னவனே அடி என்னவனே
உந்தன் வருகை
இப்பிறவியில் தவறினாலும்
தொடர்ந்திடுவேன் எப்பிறவியாயினும்
உன்னோடு வாழ்ந்திடும் வரையில்!