>> நான்

ஜோஸ்
ஜனவரி 11, 2019 04:52 பிப

விழியெட்டு தூரம் வரையிலும்
வழியெங்கும் வலிகளே
நிறைந்திருக்கின்றது 
என் வாழ்வில்!

வழிகளில் அல்ல
வலிகளிலேயே பயணிக்கின்றேன்
எனக்கான புதிய
மாற்றத்தினை தேடியே!

முயற்சிகளெல்லாம்
வெற்றியில் முடிந்திடாமல்
என்னை விலகிப் போனாலும்
நான் விலக்குவதில்லை
முயற்சியினை - எனக்கான
வெற்றியினை தொட்டிடும் வரையில்!!

வந்து பிறந்திட்டேன் இப்புவியில்
வாழ்ந்தே முடித்திடுவேன்
வெற்றியா தோல்வியா என்பதல்ல -
போராட்டமே வாழ்க்கையாக
வாழ்ந்திடினும் முயற்சிகளை
என்றும் தொடர்ந்திடுவேன்!

இதயத் துடிப்புக்
குறைந்திடும் வேலையிலும்
முயற்சித்திடுவேன் - 
மரணத்தை ஜெயித்திடவே!