சீரழிவு

A SARAVANAKUMAR
டிசம்பர் 08, 2018 08:46 முப

சாலை ஓர சீலை மறைவிலே
ஓலை இல்லா ஒத்த குடிசையிலே
ஒய்யாரமாய் ஒண்டி பிழைக்கையில்
நாத்திகம் பேச வந்தவனோ
நய்யாண்டி பார்வை தொடுக்கிறான்
ஆத்திகம் பேச வந்தவனோ
ஆணவத்தில் அள்ளி கெடுக்கிறான்
பகுத்தறிவு பேச வந்தவனோ
வேசம் கொண்டு தன் கையை என் பையில் வைக்கிறான்! வேர்வை தந்த ஒத்த உசுரு
போர்வைக்குள்ள  குமுறுது!  வாய் கொண்டு பேசினால் வழக்கு ஒன்னு வருது
எழுத்து ஒன்னு எழுதினால் ஏசு போல நடத்துற்றான்! ஏச்சு ஏச்சு பிடிங்கி புட்டு ஓட்டுக்கு வந்து நிக்கிறான்! ஒத்த நோட்ட காட்டி புட்டு எனை பித்தம் கொள்ள வைக்கிறான்! பித்தம் கொண்ட எம்மனசு சத்தமில்லாமல் கிடக்குது!! சத்தமில்லா எம்மனசு புத்தனாக துடிக்குது! புத்தன் கூட நேரில் வந்து யுத்தம் செய்ய சொல்லுது!போரிடத் தான் வலுவில்ல போக்கத்த சமுதாயத்தில!