காதல்

A SARAVANAKUMAR
டிசம்பர் 08, 2018 08:45 முப

 

மானிடந்தான் மயங்குதே
மனசுக்குள்ள தயங்குதே
ஆத்துக்குள்ள இறங்கும்போது
சின்ன மீனும் துள்ளுதே
சீலை வச்சு மீன் பிடிச்சா
சிக்காமத்தான் ஒதுங்குதே
வேட்டிய வச்சு மீன் புடிச்சா
சிக்காதெல்லாம் சிக்குதே
சீக்கிரம் தான் புடிச்சு புட்டா
சீதனம் தான் கிடைக்குமே
சீதனத்த தள்ளி வச்சு
சிலை ஒன்னு செதுக்குதே
சிலைக்கு மாலையிட்டு மடி மேல தாங்குதே
மாலையிட்ட சிலை மேல கங்கை வந்து பாயுதே
பாய்ந்த கங்கையால நங்கையாக போனதே
நங்கையின் கரம் சேர
நாழிகையும் ஏங்குதே!

ஆ. சரவணக்குமார்