காதல்

A SARAVANAKUMAR
டிசம்பர் 08, 2018 08:43 முப

ஆண்: செண்பக தோப்புக்குள்ள சேவல் ஒன்னு காத்திருக்கு சீக்கிரமா வாடி புள்ள அந்தி சாயும் நேரத்துக்குள்ள

பெண் : என் அப்பனிட்ட சொல்லி இருக்கேன் அவசரம் ஒன்னுமில்ல அப்படியே நில்லு அங்க வச்சுடுவான் சூப் சூடு பொங்க

ஆண்: கள்ளழகர் ஓடையில காளை ஒன்னு காத்திருக்கு கன்னி மயிலே நீயும் வாடி காதல் கலை கத்துக்கொள்ள

பெண்: என் அப்பனிட்ட சொல்லி இருக்கேன் காளையத்தான் போட்டு தள்ள அப்படியே நில்லு அங்க என்னை நானும் காத்துக்கொள்ள

ஆண்: திருவண்ணாமலை திண்ணையில வன்னி ஒன்னு காத்திருக்கு வாக்க படும் போகும் முன்னே வந்து சேரு அதுக்கு முன்னே

பெண்: என் அப்பனிட்ட சொல்லி இருக்கேன் வன்னிக்கு தண்ணி காட்ட சொல்லி அப்படியே நில்லு அங்க என் கண்ணியத்தை நானும் கொள்ள

ஆண்: நாச்சியார் கோயிலிலே நான் மட்டும் நாயனத்தோடு காத்திருக்கேன் கான குயிலே நீயும் வந்து ஒரு திருப்பாவை நீ பாடு

பெண்: என் அப்பனிட்ட சொல்ல வில்லை ஆண்டாளிடம் சொல்லி இருக்கேன் ரங்கமன்னாராய் நீயும் வர ஒரு பாவை நானும் பாட

ஆண்: மஞ்சள் கயிறு வச்சு கிட்டு பூமாலையோடு நானும்தானே மாரியம்மன் கோவில் வாசலிலே காத்திருக்கேன் பொன் மயிலே உன் அப்பனத்தான் கூட்டிக்கிட்டு நீயும் வர வேண்டும் நான் மாமான்னு கூப்பிட

பெண்: என் அப்பனிட்ட சொல்லி இருக்கேன்
நீதான் என் மச்சான் என! நாளு கிழமை பாத்து புட்டு நானும் உன் கூட வர மஞ்ச கயிற நீயும் கட்டு மஞ்சத்தில என்னை கட்டு.