ஊடலில் காதல்

A SARAVANAKUMAR
டிசம்பர் 08, 2018 08:37 முப

தோழி: ஆம்பல் இடையழகே ஆழி பேரழகே!
அல்லி மலர்த்தொடுத்து ஆடி வரும் தேரழகே!
யார் காண கலங்கியதோ தேயாத பிறை ஒன்று!

தலைவி: பிழை இல்லா பிறை ஒன்று !உறை இல்லா வாள் கண்டு! ஊடலின் மேன்மை கண்டு ! உறைகிறது தேய்ந்த பிறை இங்கு!

தோழி: தில்லை ஆடும் சிலையழகே ! சொல்லாடும் தமிழழகே! ஊடலின் சூதழிந்து கூடலின் சுவையறிவாய் ஒளி வீசும் மதியழகே!

தலைவி: வேட்கை எனை விரும்பி! ஆக்கை எனை அரும்பி! என் முதல்வன் காண வளர்கிறது உடு இங்கு!

தோழி: காரி முகம் கொண்டு ! பாரி அகம் கொண்டு! மாரி விழியோடு வளி தாண்டி வலியோடு உன் மீன் விழி காண வந்துவிட்டான்!

தலைவி: உன் மாரி விழி கண்டேன்! ஊழி முடி கண்டேன்! என் உடுவின் ஞாயிறு கண்டேன்! உன் மாரோடு நான் சாய்ந்து வலியின் வடு கண்டேன்!

தலைவன்: என் பாங்கி நீயடி! உன்னை தாங்கி கொள்வேனடி! இந்த வடுவின் பெரும் வலி நம் உடுவில் மறைந்ததடி!

ஆ.சரவணக்குமார்.