மகள் தேடி மடல்

A SARAVANAKUMAR
டிசம்பர் 08, 2018 08:34 முப

என் செல்லிடப்பேசி இசைக்குதடா!
என் செல்லியின் செந்தமிழ் இனிக்குதடா!
சித்திரையில் உதித்த சித்திரமே!
எந்தன் சிந்தையில் விளைந்த முத்து ரத்தினமே!
உந்தன் கால்கள் தொட வேண்டும் வின்னகத்தை! உன் கானம் பாட வேண்டும் தென்னகமே! முத்தமிழில் துயிலும் முன் பனியே! உன் சொற்றமிழில் சிதறும் செங்கதிரே! கற்றவர் ஆயிரம் முன்னிலையில் நீ கொற்றவள் ஆவது உன் மதியே! சிற்றவர்கள் காண கோடி வரின் உன் சீர் தமிழ் செதுக்கும் செங்கோலே! என் நித்திரையில் உதித்த இத்தனையும் என் செல்லிடப்பேசி இசைத்து உசுப்புதடா! என் செல்லியின் செவியில் சொல்ல துடிக்குதடா!

அன்புடன் அப்பா.