இருவர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

A SARAVANAKUMAR
டிசம்பர் 08, 2018 08:32 முப

இரு கொடியின் ஒரு மலரே!
இரு அடியின் ஒரு குறளே!
இரு நானூற்றின் ஒரு மொழியே!
இரு ஒளியின் ஒரு வளியே!
இரு முகிலின் ஒரு ஒலியே!
இரு மனதின் ஒரு குணமே!
இரு யாழின் ஒரு இசையே!
இரு துலாதட்டின் ஒரு சமநிலையே!
இரு கடல் சங்கமிக்கும் ஒரு பெருங்கடலே!
இரு புலமை கண்ட குலோத்துங்கனின் ஒரு அவையே!
இரு சிறகின் ஒரு புள்ளே!
இரு கரையின் ஒரு நதியே!
இரு துடுப்பின் ஒரு ஓடமே!
இரு உடுவின் ஒரு மதியே!
இருவரும் வாழ வேண்டும் நீடுழி!