உன்னிடம் மறைத்த என் மரணவலி கவியாக..

கனியன் பூங்குன்றன்
டிசம்பர் 05, 2018 01:59 முப
அக்கணம் நான் தவித்த தவிப்பு
உன் குரலாக கூடாது இது என்று 
அந்நொடி நான் வேண்டாத தெய்வம் இல்லை அது நீயாக கூடாதென்று 
நான் இதுவரையில் வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டினேன்
இது என்னவள் ஆகக்கூடாதென்று 
பார்க்க கூடாததை என் கண்கள் பார்தது..
கேக்க கூடாததை என் செவிகள் கேட்டது..
விஞ்ஞான தொழில்நுட்பத்தை அத்துமீறி உன்னை கண்காணித்த தண்டனையா என குலுங்கி அழுதேன்
என் வாழ் நாளில் நான் கண்டிராத அவ்வேதனை என்னை வாட்டி வதைத்து விட்டதடி
நீ ஆயிரம் ஆயிரம் விளக்கம் கூறினாலும் என்னை மறக்க உன்னால் முடந்ததா??
என்னை விட அவன் உனக்கு எவ்வகையில் பொருத்தமானவன்?
அவ்வகையில் அன்பு காட்ட தவறியது என குற்றமா ??
மந்திர தந்திரங்களின் சூழ்ச்சி என் அன்பை வென்றதா??
புயல், வெள்ளம், அக்கினி மழை சுவாலை, என அனைத்தும் அடித்து சிதறிய ஊர் போன்று
என் மனம் கவலை, வெறுப்பு, ஏக்கம், துக்கம் என மொத்தமாக உலுக்கியது
நான் கண்டவை கேட்டவை பொய்யாக வேண்டும் என என் மனதில் ஒரு அவா..
ஆனால் என்ன செய்தாலும் உண்மையை வெல்ல என்ன ஆயுதம்  உண்டென என புலம்பினேன்
நிலை குலைந்து நின்றவன் நிற்கதி ஆனபோல் தோற்றம் பெற்றேன்
ஏனெனில் உன் ஒருத்தியில் அனைத்து உறவையும் பதித்தவன் நானல்லவா
இவ்வுலகில் அத்தனை கோடி ஐனங்கள் மத்தியில் பித்தனை போல் தனித்து பேதையாக நின்றதாக உணர்ந்தேன்
அக்கணம் நான் விரும்பியது என் மரணம் மட்டுமே
நான் கோழை அல்ல ஆனால் என்னவளிடம் தோற்றேனே..
நான் வீரன் அல்ல ஆனால் என்னவளிடம் வஞ்சித்தேனே..
என் சொல்லி என் வாழ் நாளில் இதை அழிப்பேன் என் மனதை விட்டு..
காலங்கள் என் காயங்களை போக்குமா?
பதில் கூறு இறைவா!!!
பக்குவமடைய வழி காட்டு
பரதேசியானவன் சம்சாரியாக ..
மன்னிப்தும் மறப்பதும் தானே வாழ்க்கை..
இருப்பினும் என் நெஞ்சுக்குழியில் 
ஒரு நெருடல்...