காத்திருப்பு

M D Mohan Raj
டிசம்பர் 03, 2018 02:11 பிப
வழி மேல் விழி வைத்து 
காத்திருந்த 
அத்ததருணங்கள் மாற்ற 
இதோ இப்போது 
இறுதியாக வந்துவிட்டான்..
 
அந்த பன்னிரண்டு மாதம்
பிரிவு வலியை
போக்கும் ஒரே சக்தியாக
இதோ இப்போது
இறுதியாக வந்துவிட்டான்..
 
பகிர்ந்த இன்பங்கள்
கோடி ஒரே நொடி
மின்னலாய் வந்து போக
பார்வை இரண்டும் நேர் கொண்டு
சந்திக்க முடியாமல் தத்தளிக்க
 
அவன் இவளை நோக்க
அது புரிந்தவளாய்
இவள் பதில் நோக்கும் 
சக்தியில்லாமல்
இவள் மண்ணை நோக்க
 
அவளை நோக்க வைக்கும்
யுக்தி அறிந்தவனாய்
அவன் மண்ணை நோக்க
இது அறிந்து சற்று
நாணம்கொண்டவளாய்
அவனை நோக்க
 
ஒரு நொடி பொழுது
வீனடிக்கமால்
அவன் அவளை பார்க்க
தான் மாட்டி கொண்டதை
வெளிக்காட்டமால் அவளும்
விழி மாற்றாது
அவனை பார்க்க
 
இதோ இறுதியாக 
ஒருவழியாக
பார்வை இரண்டும் 
சந்தித்து கொள்ள
சத்தமின்றி போர்
செய்துகொண்டிருக்க 
 
தொலைவில் எதார்த்தமாய்
ஒலிபெருக்கியில்  
பாடல் வரிகள் 
காற்றில் கரைய...
"பார்வை இரண்டும்
பேசிக்கொண்டால்
பாஷை ஊமை 
ஆகிவிடுமோ..."
 
அப்பார்வைகள் நேரத்தை 
கடத்திகொண்டிருக்கும்
அந்த ஒவ்வொரு நொடிகளும்
அழகனாதே!!!