முருகா !

சோலை..! CSR..!
டிசம்பர் 02, 2018 10:24 பிப
பூவும் நீயே
பூவின் மனமும் நீயே
தேனும் நீயே
தேனெடுக்கும் வண்டும் நீயே...!

அன்பும் நீயே
மார்கழி திங்களும் நீயே
நிலவின் ஒளி நீயே
உலக அனுவும் நீயே...!

அமரன் நீயே
ஆழிகடல் அரசன் நீயே
முக்கண் மைந்தன் நீயே
முத்தமிழ் ஆசான் நீயே...!

வீரத்தில் உயர்ந்தும்
அழகில் சிறந்தும்
அன்பில் கரைந்தும்
அடக்கத்தில் பணிந்தும்
நிற்பவன் நீயே...!

தரனி எல்லாம் தனித்து,
தனித்து உச்சி அமர்ந்து,
உச்சி குழிர குளித்து,
பஞ்ச அமிர்தம் தருபவன் நீயே...!

பெயருக்கு சொந்தன்
பிறப்பில் ஆண்மான்
தேவர்களை காத்தான் _அவனே
தேவயானியை மணந்தான்...!

சொல்லில் வித்தன்
சூரனுக்கு எத்தன்
அன்பில் பித்தன்
சினத்தால் தனித்தவன் _ முருகனே...!

மூன்றெலுத்து பெயரனே
மூவுலக செல்வனே
அம்மையுடன் மூவனே
எப்பன் முருகனே...!

குறிஞ்சி நிலம் சென்றான்
குறும்பு சில செய்தான்
வள்ளி அம்மை கண்டான்
காதல் மணம் செய்தான்...!

வண்ண மயில் ஆசனத்தில்
கொண்டைமயிலோ (சேவல்) கொடியேற்றி
வேலூன்றி காத்தவன்
கந்த பெருமானே..!