முத்து (குழந்தையை இழந்த தாய்) !

சோலை..! CSR..!
November 02, 2018 08:48 பிப
உள்ளங் கையில் சிப்பி
ஒன்றை தாங்கிச் சென்றவள்..
திங்கள் சில காத்து
சொப்பனம் கோடி கொண்டவள்..
தடைகள் தடையாய் அனிந்து
பாவை அவள் முத்திட்டாளோ..
அலை அதை எடுத்துச்செல்ல‌
உரிமை எவர் கொடுத்தாரோ..
முத்தொன்று சென்றதோ, ஆழ்கடலில்
சிப்பி வேறொன்றைத் தேடி..!
_போடி சோலை