சம்மதம் தருவாயோ!

சோலை..! CSR..!
October 29, 2018 09:19 பிப
சாரல் மழைத்துளியில்
சாய்ந்தாடும் மரத்தடியில்
பச்சை நிற புடவையில்
பாவை ஒருத்தியை கண்டேன்..,

நேத்திரம் மறுத்ததடி
திசைஎட்டு செல்ல...

நானம் கொண்ட பெண்ணே
நினைவில் நீதானடி

நம்ப மறுத்ததடி மனமோ
மங்கையே நீ பெண்தானோ..?

சகியே சமிக்கை செய்வாயா
ஆண்டு நூறு வாழ..!