சிந்தனைகள் சில

சுவின்
October 05, 2018 02:42 பிப
காசுக்கு மதிப்பு அதிகம் - காரணம்
அவை வேற்றுமை காட்டுவதில்லை – ஆனால்
மானிடனுக்கு மதிப்பு குறைவு – காரணம்
அவனிடம் ஒற்றுமைக்கு இடமில்லை.

பல துறைகளை வென்ற மானிடா – ஏன்
உன் அடுத்துள்ள மானிடனின்
உள்ளத்தை வெல்ல முடிவதில்லை?

இருள் சூழ்ந்த இரு உலகுக்கு
இடையேயுள்ள ஒளிதான் வாழ்க்கை.

எதிரிகள் தானாக முளைக்கும் பயிரல்ல – மாறாக
நீயாக விதைத்து வளர்க்கும் மரம்.

மாற்றம் என்பது சொல்லில் அல்ல – மாறாக
செயலில் இருக்க வேண்டும்.