மனம் மாறுமா?

சுவின்
October 05, 2018 02:22 பிப
                    மனம் மாறுமா?
 
மனமே, என் மனமே நொறுங்கி போனதே
ஏழையின் வியர்வையை சுரண்டும்
மானிடனின் மனமும் மாறாதோ
பாமரனின் குருதியை காணும்
வஞ்சகனின் மனமும் மாறாதோ
மழலைகளின் மூச்சை நிறுத்தும்
மக்களின் மனமும் மாறாதோ

வளர்ச்சியை தடுத்து நிறுத்தும்
வலியவனின் மனமும் மாறாதோ
பெண்மையின் கற்பை சூறையாடும்
ஆண்மையின் மனமும் மாறாதோ
தாய்மை உணர்த்தும் பொருளை 
சேய்மை மனமும் அறியாதோ
இவற்றிலிருந்து என் மனம் மாறியதா? 
இல்லை முயற்சி செய்கிறேன்.
 
                                                                              ம.மரிய சுவின்