சிந்தனைகள் சில

சுவின்
October 05, 2018 11:36 முப
முள்கள் குத்தினால்தான் முள்களின்
தன்மை தெரியும் - அதுபோல
துன்பங்கள் இருந்தால்தான் வாழ்க்கையின்
முழுமை தெரியும்.

இன்பம் மட்டுமே வாழ்வென்றால்
வாழ்வு ருசிக்காது – அதுபோல
துன்பம் மட்டுமே வாழ்வென்றால்
வாழ்வு மலராது – ஆனால்
இரண்டும் கலந்த வாழ்வென்றால்
வாழ்வு நம்மில்.