காந்தவிழியால் கவர்ந்தவளே!!!

சோலை..! CSR..!
செப்டம்பர் 20, 2018 03:49 பிப
ஓரவிழி பார்வையில் ஒடுக்கியவளே,
பலமுறை பார்த்த பெண்ணோ நீயடி., 
நிலவின் ஈர்ப்பில் சிக்கிய அலைபோல்
என்னவள் காந்தவிழியில் சிக்கித் தவிக்கிறேன்... 
 
அவள் குரல் கேட்ட நொடியோ 
சிகரம் தொட்ட உணர்வில் - நான்
என்னவள் என்னும் உரிமையில் வாழ்ந்தேன்...
 
அவள் இல்லை என்றவுடன் 
கண்ணிலோ அடைமழை....
 
என் அன்பானவளே ! 
திமிருக்கு சளைக்கலையே நீ, 
 
ஓர் வார்த்தையில் கொன்றவளே!
நீயோ! அரியலையா உயிருக்குள் நீயடி,
நீயில்லை சோலையும் கள்ளிபூத்த பாலையடி ..!