தி மு க தலைவா!

சோலை..! CSR..!
செப்டம்பர் 12, 2018 01:09 பிப
கிழக்கில் உதயம் பார்த்தோம்
       நன்மைகள் அதில் கொண்டோம்.,
சூரியனே! மேகங்கள் மறைத்தும்
      ஒளி குன்றா பணி உனதே.,
எதிரிக்கும் வாய்ப்பளித்தாய், தலைவா!
     அதனால் நீ நிலைபெற்றாய்.,
பகலில் நிலவின் ஆதிக்கம்
      உதயன் உதயும் முன்னே.,
கலைஞா! பேச்சிலும், எழுத்திலும்,
     உனக்கென்று தனி பாணியப்பா.,
படமும் பாடமும் பட்டியலிட்டு
     தீருமா (தி மு க) தலைவா..,
தமிழ் சுவைக்கும் கனிகளில்
     பழுத்தக் கனி நீயே!
ஓய்வின்றி உழைத்தாய் அதனால்
      ஓய்வா? எட்டாம் திங்களில்..
தலைவா! என்றும் அன்புடன் 
       தமிழ் சுவைக்கும் சோலை..!