சமூகத்தின் கண்ணீர்!

சோலை..! CSR..!
செப்டம்பர் 12, 2018 12:31 பிப
சாலையோர மதுக்கடை
சாரைசாரையாய் கூடுவோர்,
சாராயப் பாட்டில்கள்
முதல்பரிசு கேப்பையிலே...

முட்டால் மக்களெல்லாம்
வீதியின் ஓரத்திலே,
விதியின் கொடுமையால்
வீடுகளில் கண்ணீர்...

பதனீர் குடித்தவர்கள்
மதுநீர் குடிக்கிறார்கள்,
ஆணுக்கு குறையில்லை - பெண்களும்...

குப்பைத்தொட்டி ஓரத்தில்
பட்டாவும் போட்டனர், 
தவறானச் சமூகத்தில்
தவளும் பூக்களோ (பிஞ்சுவயதில்)...
                        அன்புடன் சோலை!!!